கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மறு பரிசோதனை அவசியம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மறு பரிசோதனை அவசியம்

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவு பரிசோதனையில் கிருமித் தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். விரைவு பரிசோதனை முடிவின்போது அறிகுறிகள் இல்லாமல் இருந்து 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கும் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை பிசிஆர் பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை