பேக்கரியில் கேக் சாப்பிட்ட 3 பெண் குழந்தைகள் மயக்கம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பேக்கரியில் கேக் சாப்பிட்ட 3 பெண் குழந்தைகள் மயக்கம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட 3 குழந்தைகள் மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் ஒரு பேக்கரி உள்ளது. இங்கு 5வயதுக்கு உட்பட்ட 3 பெண் குழந்தைகள் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் திடீரென அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக 3 குழந்தைகளையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மூங்கில்மண்டபம் பகுதியில் உள்ள அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 30 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பேக்கரியில் கேக் சாப்பிட்ட 3பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை