ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மேல்மருவத்தூரில் முதல்வருக்கு கும்பமரியாதையுடன் வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மேல்மருவத்தூரில் முதல்வருக்கு கும்பமரியாதையுடன் வரவேற்பு

மதுராந்தகம்: திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து காரில் சென்றார்.

முன்னதாக மேல்மருவத்தூருக்கு வந்தபோது முதல்வருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், ஆன்மிக இயக்க நிர்வாகி செந்தில்குமார் தலைமையில், பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஏராளமான செவ்வாடை தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் முதல்வருக்கு சித்தாமூர் ஒன்றிய அதிமுக செயலாளர் டாக்டர் பிரவீன்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நிர்வாகிகள் கோபுராஜ், கதிரவன், செல்லதுரை, லிங்கன், கிருஷ்ணன், ரவி, விஜயன், புஷ்பராஜ், பிரகாஷ், ராஜ், செந்தில், சபரிநாதன் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

.

மூலக்கதை