12 மீட்பு விமானங்களில் 1405 பேர் சென்னை வந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
12 மீட்பு விமானங்களில் 1405 பேர் சென்னை வந்தனர்

மீனம்பாக்கம்,: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு, மீட்பு விமானங்களில் அழைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, குவைத், ரியாத், ஓமன், கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் தவித்த 1405 பேர், கடந்த 2 தினங்களில் 12 மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 840 பேர் வெளிநாடுகளிலேயே மருத்துவ சான்றிதழ் பெற்று வந்தனர். அவர்களுக்கு குடியுரிமை, சுங்க சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், அவர்களது கைகளில் தனிமைப்படுத்துதலுக்கான ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு அவரவர் வீடுகளுக்கு சுகாதார துறையினர் அனுப்பினர்.

மருத்துவ சான்றிதழ்களுடன் வராத 565 இந்தியர்களுக்கு சென்னை விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனை செய்து வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பினர். மீட்பு விமானங்களில் வரும் வெளியூர் பயணிகள் அவரவர் ஊர்களுக்கு செல்வதற்காக அரசு 4 சிறப்பு சொகுசு பஸ்களை இயக்கியது.

அந்த பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்குள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி சென்றன. நேற்று இரவில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்து வாடகை கார், வேன்களில் சென்றனர்.

.

மூலக்கதை