முதல்வர் பெயரைக்கூறி துணிகரம்: ெபண் எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயற்சி: கில்லாடி வாலிபர் சிக்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் பெயரைக்கூறி துணிகரம்: ெபண் எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயற்சி: கில்லாடி வாலிபர் சிக்கினார்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்கலூர்பேட் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ விடதலா ரஜினி. இவரது செல்போனுக்கு நேற்று வந்த ஒரு அழைப்பில் பேசியவர் தன்னை முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்து அவர், கொரோனா கால கடனுதவியாக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 கோடி மத்திய அரசு வழங்க உள்ளது. இந்த நிதியின் மூலமாக தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும், எனவே முதல்வர் ஜெகன்மோகன் தங்களிடம் இதுகுறித்து பேசும்படி கூறினார்.

இந்த நிதியை பெறுவதற்கு ₹50 ஆயிரம் பிராசசிங் கட்டணம் செலுத்தவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட எம்எல்ஏ விடதலா ரஜினிக்கு பேசியவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், மாநில டிஜிபி கவுதம்சவாங் மற்றும் குண்டூர் ஹர்பன் எஸ்பிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், எம்எல்ஏவிடம் போனில் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.  
செல்போன் டவரை ஆதாரமாக கொண்டு விசாரித்ததில், விசாகப்பட்டினத்தில் இருந்து ெஜகஜீவன் (30) என்பவர் பேசியது தெரியவந்தது.

தீவிர விசாரணையில்,  அவர் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றவில்லை என தெரியவந்தது. இதையடுத்து எம்எல்ஏவின் உதவியாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாகப்பட்டினத்தில் பதுங்கிய ெஜகஜீவனை கைது செய்தனர்.

கைதான ெஜகஜீவன், ராயசொட்டி பெண் எம். எல். சி. ஜகியாகானுக்கும் சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று போன் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்ற முயன்றது தெரியவந்தது.



.

மூலக்கதை