காதலனின் தந்தை கொலை காதலியின் தந்தைக்கு வலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காதலனின் தந்தை கொலை காதலியின் தந்தைக்கு வலை

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற கணேசன் (48). இவரது மகன் ஆகாஷ் (24).

இவர் ஐடிஐ படித்துவிட்டு வேலையின்றி இருந்து வந்தார். லால்குடி ரோஸ்கார்டன் 3வது தெருவை சேர்ந்தவர் முக்காடு குமார் என்ற செல்வகுமார்.

இவரது மகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவரும், ஆகாஷூம் (24) காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் தந்தை முக்காடு குமாருக்கு தெரியவந்தது. இதில் கோபமடைந்த அவர், ஆகாஷை, மகளையும் கண்டித்துள்ளார்.

ஆனாலும், இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் இருவரும் பைக்கில் ஒன்றாக ஜாலியாக சுற்றினர்.

இதுதெரிந்த மாணவியின் தந்தை முக்காடுகுமார் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில் நேற்று முக்காடு குமார், தனது நண்பரான பாம்பு நாகராஜ் என்பவரை அழைத்துக்கொண்டு பார்த்திபன் வீட்டுக்கு சென்று இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   திடீரென முக்காடு குமாரும், பாம்பு நாகராஜும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்திபன் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த பார்த்திபனை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய முக்காடு குமார், பாம்பு நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்

.

மூலக்கதை