கொரோனா பாதித்த தாய்க்கு ‘டென்ட்’: வாங்கிக் கட்டிக் கொண்ட மகன்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதித்த தாய்க்கு ‘டென்ட்’: வாங்கிக் கட்டிக் கொண்ட மகன்கள்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் வேளேறு மண்டலத்தில் உள்ள பீச்சரா கிராமத்தை சேர்ந்த மூதாட்டி லச்சம்மா (82). அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதில் ஒரு மகன் இறந்துவிட்டார். லச்சம்மா தனது மூன்றாவது மகனோடு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிெசய்யப்பட்டது.

இதை அறிந்ததும் மூதாட்டியை பாதுகாத்து வந்த மூன்றாவது மகன், தனது வீட்டை விட்டு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள வயக்காட்டில் தற்காலிகமாக ‘டென்ட்’ அமைத்து தனது தாயை தங்கவைத்ததுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், அந்த மூதாட்டி தங்கியிருந்த ‘டென்ட்’ கொட்டகை புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

மூதாட்டியின் நிலையை கண்டு பலரும் அவரது கல் நெஞ்சம் கொண்ட மகன்கள், மகளை கண்டித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். போலீசார் விசாரித்ததில் தங்கள் வீட்டில் போதுமான இட வசதி இல்லாததால் இப்படி செய்ததாக ் லச்சம்மாவின் மூன்றாவது மகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து லச்சம்மா கூறுகையில், ‘எனது மகன்களில் ஒருவருக்கு இரண்டு வீடு, வாசல் இருந்தும் எனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறித்து, அவர்களுடன் கூட்டி செல்ல மறுத்துவிட்டான்’ என தெரிவித்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர், மகன்கள் மற்றும் மகளை அழைத்து உள்ளூர் அதிகாரிகள் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டதால், மூதாட்டி மூன்றாவது மகனிடம் இருந்து இரண்டாவது மகனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


.

மூலக்கதை