குண்டுவெடித்து வியாபாரி பலி: ெபண் உட்பட 4 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குண்டுவெடித்து வியாபாரி பலி: ெபண் உட்பட 4 பேர் காயம்

திமாபூர்: இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுவெடித்து நாகலாந்தில் பழைய இரும்பு வியாபாரி பலியானார். மேலும் பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.   நாகாலாந்தின் திமாபூர் மாவட்டம் பர்மா முகாம் பகுதியில் ஒருவர் பழைய இரும்பு பொருள் வியாபாரம் நடத்தி வந்தார்.

நேற்று மாலை ஒரு இரும்பு பொருளை சுத்தியால் அடித்து உடைத்தார். அப்போது அது வெடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

மேலும், அப்பகுதியில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் நயீம் முஸ்தபா கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு வெடித்ததில் பழைய இரும்பு வியாபாரி பலியானார்.

பெண் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு பொருளை சாதாரண இரும்பு குப்பி என்று நினைத்து சுத்தியலால் அடித்து உடைத்த போது விபத்து நடந்துள்ளது.

குண்டுவெடிப்பு காரணமாக அவரது வீடு ஓரளவு சேதமடைந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

.

மூலக்கதை