ஹரிவன்ஸ் சிங் மீண்டும் போட்டி? பொது வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹரிவன்ஸ் சிங் மீண்டும் போட்டி? பொது வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு

புதுடெல்லி: மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் வரும் 14ம் தேதி நடப்பதால் முன்னாள் துணை தலைவர் ஹரிவன்ஸ் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு ெசய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, கூட்டத்தொடரில் என்ன விவகாரங்களை எழுப்பலாம், எந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று அந்த கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம் நடந்தது.



இந்நிலையில், மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த பீகார் எம்பி ஹரிவன்ஸ் நாராயண் சிங் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதனால், இவ்விவகாரம் குறித்தும் காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

வருகிற 14ம் தேதி இந்தப் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்புகள் மற்றும் வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (செப்.

11) நடைபெறுகிறது.

ஆளும் பாஜக தரப்பில் துணை தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த ஹரிவன்ஸ் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை தலைவராக தேர்வான பின், அவர் பீகாரில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக.

2018ல் ஹரிவன்ஸ் துணை தலைவராக போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக பி. கே. ஹரிபிரசாத்தை காங்கிரஸ் களமிறக்கியது. பெரும்பான்மை பலம் இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார்.

தற்போது எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால், துணை தலைவராக யார் தேர்ந்ெதடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

.

மூலக்கதை