முதல்வர், 5 அமைச்சர்கள் தனிமை கேரள அமைச்சரவை கூட்டம் ரத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர், 5 அமைச்சர்கள் தனிமை கேரள அமைச்சரவை கூட்டம் ரத்து

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் தனிமையில் உள்ளதால் இன்று நடக்க இருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டு 16ம் தேதிக்கு  மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கேரள அமைச்சர் ஏ. கே. பாலனின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஏ. கே. பாலன் தனிமையில் சென்றுள்ளார்.   இந்த நிலையில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனும் தனிமையில்  சென்றுள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே இதற்கு முன்பு ஒருமுறை தனிமையில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல அமைச்சர்கள்  ஜெயராஜன், ராமகிருஷ்ணன், எம். எம். மணி, ஷைலஜா ஆகியோரும் தனிமையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடக்க இருந்த அமைச்சரவை கூட்டம் வரும் 16ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல 10ம் தேதி மலங்கர  கத்தோலிக்க சபை மற்றும் யாக்கோபு சபை ஆகியவற்றுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையும் வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் ஆன்-லைன் வழி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை