உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

உலக அறிவுசார் சொத்து நிறுவனம், கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீட் பிசினஸ் ஸ்கூலும் இணைந்து 2020ம் ஆண்டுக்கான உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா முதல் முறையாக முதல் 50 நாடுகளில் ஒன்றாக நுழைந்துள்ளது. உலகிலேயே குறைந்த நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் கண்டுபிடிப்பு சார்ந்த குறியீட்டுப் பட்டியலில் 3வது முக்கிய நாடாக இந்தியா நிலவுகிறது. மேலும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் நுட்ப சேவைகள் ஏற்றுமதி, அரசு இணையதள சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பட்டியலில் முதல் 15 இடங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.. மொத்தம் 131 நாடுகள் இந்தப் பட்டியல் தொடர்பாக ஆராயப்பட்டிருக்கின்றன. கண்டுபிடிப்பு சார்ந்த கல்வி நிறுவனங்கள், உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

மூலக்கதை