உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்

800 பேரை பரிசோதித்ததில் 240 பேருக்கு தொற்று

பாரீஸ்: உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத பிரான்சின் தென்பகுதியில் செயல்படும் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடிவருவதால், பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பிரான்ஸ் தவித்து வருகிறது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால் இதுவரை உலகளவில் 2. 67 கோடி  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி  உள்ளனர். பிரான்ஸில் இன்றைய நிலையில் 3,09,156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

30,724 பேர் பலியாகினர். ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், கடந்த சில நாட்களாக மீண்டும் ேவகமெடுத்து வருகிறது.

சமீபத்தில் ஒரே நாளில் 7,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாச பகுதியாகும்.

ஆயிரக்கணக்கான ஜோடிகள் கும்பலாக வந்து இன்பத்தை அனுபவிக்கும் இடமாகும். ஆனால், தற்போது இந்த இடம் கொரோனா பரவும் மையமாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் உல்லாசமாக இருக்க வந்த சுமார் 800 நிர்வாண நபர்களை பரிசோதனை செய்ததில் 30 சதவீதம் (கிட்டதிட்ட 240 பேர்) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

‘வில்லேஜ் நேச்சரிஸ்ட்’ என்று அழைக்கப்படும் இந்த ரிசார்ட், பாலியல் உறவுக்கான கிளப்கள், சானா எனப்படும் வெப்பம் காய்வதற்கான இடங்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நைட் கிளப்புகள் சூழ உல்லாச விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கிறது.

வெட்டவெளியிலும், மரம் செடிகளின் மறைவிலும் திறந்த வெளியில் பாலுறவு கொள்வோர் அதிகம். இங்கு வருவோர் எல்லாம் பாலுறவுக்காக மட்டும் வருவதில்லை.

அமைதியான சூழலில் தங்கி ரசிக்கவும் வந்து செல்கின்றனர். கோடைக் காலத்தில் இந்த பகுதிக்கு ஒரு நாளில் 45,000  பேர் வருவதுண்டு.

பெரும்பாலானவர்கள் பேபிலான், க்யூபிட் அல்லது ஈடன்  போன்ற தங்குமிடங்களில் வாடகைக்கு அறைகள் எடுத்து தங்குவார்கள்.

சிலர் வார  இறுதியில் அல்லது ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வந்து செல்வார்கள்.

ஆகஸ்ட் மாத இறுதியில், அந்த கிராமத்தின் ஓட்டல் ஒன்றில் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடந்ததாகவும், சமூக இடைவெளி விதிகள்  பின்பற்றாததால் கொரோனா வேகமாக பரவியதாக ‘வில்லேஜ் நேச்சரிஸ்ட்’ ரிசார்ட்டின் மேலாளர் டேவிட் மசெல்லா கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இங்கு  வருகை தரும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வருகின்றனர். கொரோனா  பெருந்தொற்றால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.கேப் டி ஏக்டேவில் இருக்கும்  நடமாடும் பரிசோதனை மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டும் கொரோனா பாதிப்பு  விகிதம், அதனை சுற்றியுள்ள பகுதிகளைவிட நான்கு மடங்கு அதிகம் என்று பிரெஞ்சு  அதிகாரிகள் கூறுகின்றனர். தொற்று பரவல் தொடங்கியதுமே, அப்பகுதியில் செயல்பட்ட கிளப்புகள் மற்றும் பார்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

எனது நிறுவனத்தில் 22 பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டேன். இங்கு  இருக்கும் மற்றொரு பிரபலமான இடம் லெ கிளாமர் நைட் கிளப்.

நிர்வாண நடனம் நடக்கும் இந்த இடத்தில் சுமார் 1000 பேர் கூடி மகிழ்வார்கள். ஆனால், கடந்த  மார்ச் மாதம் இதனை மூட உத்தரவிடப்பட்டது.

விதவிதமான செக்ஸி ஆடைகள் விற்கும் கடையும் மூடப்பட்டன. 800  பணியாளர்களில் 300 பேர் இங்கு வேலையிழந்துள்ளனர்.

என் வியாபாரம் 80 சதவீதம்  முடங்கிவிட்டது’ என்றார்.


.

மூலக்கதை