சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் பபி விக்ஸி, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ப்ராக்ஸி’ (தனக்கு பதிலாக நம்பகத்தன்மை உள்ள ஆள்மூலம் வாக்கு அளித்தல்) மூலம் சட்டமன்றத்தில் வாக்கு அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக இந்த நெருக்கடியான சமயத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவது சிரமம் என்றும் மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கைக்கு சட்டமன்ற சபாநாயகர் அந்தோனி ரெண்டன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் பபி விக்ஸி, தனது 2 மாத கைகுழந்தையுடன் சட்டசபை வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு மசோதா பற்றி பபி விக்ஸி பேசும்போது, தனது குழந்தைக்கு பாலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி ஹிலாரி உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களால் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

2 மாத கைகுழந்தையுடன் தனது சட்டசபை பணியை மேற்கொண்ட கலிபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் பபி விக்ஸியை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

.

மூலக்கதை