உள்ளே வெளியே கண்ணாடி தொழில்நுட்பம் ஜப்பானில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறை: மக்கள் மத்தியில் வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளே வெளியே கண்ணாடி தொழில்நுட்பம் ஜப்பானில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறை: மக்கள் மத்தியில் வரவேற்பு

டோக்கியோ: ஜப்பானில் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.    உலக புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஷிகெரு பென் என்பவர், ஜப்பான் நாட்டின் டோக்கியோவின் நிப்பான் பூங்காவில்  ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறையை பொது பயன்பாட்டுக்கு வடிவமைத்து கொடுத்துள்ளார். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் கட்டுமானப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற ஷிகெரு பென் வடிவமைத்துள்ள   ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறையானது, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா?, உள்ளே யாரும் உள்ளனரா? என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கழிப்பறையின்  வெளியில் இருந்து உள்ளே இருப்பதை பார்க்கலாம். ஆனால் உள்ளே  மக்கள் இருக்கும்போது, அவர்கள் வெளியே தெரிய மாட்டார்கள்.

இந்த ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறையானது பஸ், விமானம் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் அமர்ந்திருப்பதை போல், ஆடம்பரமாக உள்ளது. இது எப்படி இயங்குகிறது என்றால், ஒரு நபர் கழிப்பறைக்குள் சென்று கதவைப் பூட்டும்போது, ​​அதன் கிளாசானது ஒரு சுவர் போல் மாறுகிறது.

4 சுவர்களுக்குள்ளும் ஒளி புகாது. ஆனால், உள்ளே அமர்ந்திருக்கும் நபர் வெளியில் ெசல்லும் மக்களின் இயக்கத்தையும் பார்க்க முடியும்.ஆனால் வெளியில் இருப்பவருக்கு உள்ளே இருப்பவர்களை பார்க்க முடியாது. அதனால், எந்த சிக்கலும் யாருக்கும் ஏற்படுவதில்லை.

இந்த கழிப்பறைகள் ஜப்பானின் யோகி புகாமாச்சி மினி பூங்கா மற்றும் ஹரு-நோ-ஒகாவா சமூக பூங்காவில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கழிப்பறையை ஜப்பான் மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர்.


.

மூலக்கதை