ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் எம். எஸ். தோனி, இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன்.

இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு (ஆக. 15) 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.

என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக முத்திரைப் பதித்த தோனி, கடந்த 2005ம் ஆண்டு டிச.

2ம் தேதி, இலங்கைக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. யில் முதல்முறையாக களமிறங்கினார்.

விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தமது திறன்மிக்க ஸ்டைலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014 வரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அவர், 2014 டிசம்பர் 30ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதேபோன்று, 2007ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

இவர் கேப்டனாக இருந்த ேபாதுதான், ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை, ஐசிசி ஆசிய கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து தொடர்களில் இந்திய அணி கோப்பைகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி, அடுத்த மாதம் 19ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சர்வதச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

.

மூலக்கதை