'இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்': மைக் போம்பியோ

தினமலர்  தினமலர்
இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள்: மைக் போம்பியோ

வாஷிங்டன்: இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திரதினத்தையொட்டி அவர் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த பன்மைத்துவ ஜனநாயகங்கள், உலகளாவிய சக்திகள், நல்ல நண்பர்கள்.


இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இரு நாடுகளும் நெருங்கிய உறவையும், ஜனநாயக மரபுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளன. பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, விண்வெளி போன்ற அனைத்து துறைகளிலும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும்' இவ்வாறு மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.


மூலக்கதை