முடிவுக்கு வந்தது இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தம்...!! சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
முடிவுக்கு வந்தது இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தம்...!! சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி அறிவிப்பு

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்தியாவின் மிகவும் முக்கியமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தல என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர்,  ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை செமி பைனல் போட்டியாகும். இந்தியா கடும் போராட்டத்திற்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசி வரை போராடிய தோனி, இந்த போட்டியில் ரன் அவுட் ஆனார். இதுதான் இவர் கடைசியாக விளையாடிய போட்டியகும். அதன்பின் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வந்தது. அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது. ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் அதற்குள் கொரோனா காரணமாக இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக 6 மாதமாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் அவ்வப்போது தோனி சிரமப்பட்டார். மேலும் சில தடவை கீப்பிங்கிலும் தவறுகளை செய்தார். அதேபோல் டிஆர்எஸ் எடுப்பதிலும் தோனி சில நேரங்களில் தவறுகளை . சென்ற போட்டியில் இவரால் களத்தில் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்று பாதியில் வெளியேறி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சக போட்டியாளராக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை