பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது

தினகரன்  தினகரன்
பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது

பெங்களூரு: பெங்களூருவில் கலவரம் நடந்த தேவர்ஜீவனஹள்ளி மற்றும்  காடுகொண்டனஹள்ளி போலீஸ் சரகத்தில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பி  வருவதாக கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர்  சரணப்பா தெரிவித்தார். முகநூலில் குறிப்பிட்ட மதத்தின் மீது  தவறான விமர்சனம் வந்ததை காரணமாக வைத்து, கும்பல் ஒன்று கடந்த 11ம் தேதி  இரவு பெங்களூருவில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டது. இதனால், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர்  உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 287 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர்  சரணப்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கலவரத்திற்கு  காரணமானர்கள் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விரைவில் உண்மையான  குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கலவரம் நடந்த பகுதியில் தற்போது  அமைதி திரும்பி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பித்துள்ள  ஊரடங்கு நாளை காலை 6 (இன்று) மணியுடன் முடிகிறது. ,’’ என்றார்.நவீன் தலைக்கு விலை உ.பி.யில் ஒருவர் கைதுசமூகவலைத் தளங்களில்  தவறாக பதிவு செய்த புகாரில்  கைது செய்யப்பட்டுள்ள நவீன் குமாரின் தலையை யார் வெட்டி கொண்டு வந்தாலும்  ரூ.51 லட்சம் பரிசு வழங்குவதாக உத்தரபிரதேச த்தை சேர்ந்த ரிஜ்வி அறிவித்தது  சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து,    மீரட் மாவட்டம், ரசூல்புரா கிராமத்தை சேர்ந்த அவரை உபி போலீசார்  ரிஜ்வி என்பவரை நேற்று காலை கைது செய்தனர்.

மூலக்கதை