ஒரே நாளில் 8.68 லட்சம் பரிசோதனை: நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 8.68 லட்சம் பரிசோதனை: நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: நாட்டில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிகப்பட்சமாக 8 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * 24 மணி நேரத்தில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 65,002.* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 192.* கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 996.* நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 49,036.* மொத்த பலி சதவீதம் 1.94.* குணமானவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 8 ஆயிரத்து 936. * குணமடைந்தோர் சதவீதம் 71.61. * சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 220. * சிகிச்சை பெறுவோர் சதவீதம் 26.45.* கடந்த 11ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,061.* அதன் பிறகு, கடந்த 7ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் இல்லாத வகையில், நேற்று முன்தினம் ஒரேநாளில்  8 லட்சத்து 68 ஆயிரத்து 679 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் வரை (14ம் தேதி) மொத்தம் 2 கோடியே 85 லட்சத்து 63 ஆயிரத்து 95 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே நேற்று கூறுகையில், ``இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனையில் உள்ளன. இது முடிந்ததும், கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நிற்கும் மருத்துவ பணியாளருக்கே முதல் தடுப்பூசி போடப்படும்,’’ என்றார்.4 நாள் பட்டியல்: கடந்த 4 நாளில் நடத்தப்பட்ட பரிசோதனை எண்ணிக்கைநாள்    எண்ணிக்கைஆக. 11    7,33,449ஆக. 12    8,30,391ஆக. 13    8,48,728ஆக. 14    8,68,679

மூலக்கதை