கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கிரேக்கத்தில் மீண்டும் கிளுகிளு துளிர் விடும் பாலியல் தொழில்: வாடிக்கையாளர், தொழிலாளியை பாதுகாக்க நூதன திட்டம்

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கிரேக்கத்தில் மீண்டும் கிளுகிளு துளிர் விடும் பாலியல் தொழில்: வாடிக்கையாளர், தொழிலாளியை பாதுகாக்க நூதன திட்டம்

ஏதென்ஸ்: கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கிரேக்க நாட்டில் மீண்டும் பாலியல் தொழில் துளிர்விட்டுள்ளது. வாடிக்கையாளர் மற்றும் பாலியல் தொழிலாளியை பாதுகாக்க நூதன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் கிரேக்க நாட்டில் அனைத்து பாலியல் விடுதிகளும் கடந்த ஜூன் 15ம் தேதி மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டன. ஊடரங்குகள் தளர்த்தப்பட்டதால் தெசலோனிகியில் உள்ள மூன்று பாலியல் விடுதிகளின் நிலவரம் குறித்து ஆராய ஒரு நிருபர் குழு செய்தி சேகரிக்க சென்றது. வாடிக்கையாளர்கள்  காத்திருக்கும் லாபியில், கிளுகிளுப்பான இசை இசைத்தது. ஒரு பெண் பாலியல் தொழிலாளி  குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளரை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றார். சாதாரணமாக செயல்பட்ட விடுதிகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ‘கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பாலியல் தொழிலாளிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  பாலியல் விடுதிகள் ‘தங்கம்’ மற்றும் ‘வெள்ளி’ என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘தங்கம்’ குழுவில் உயர்மட்ட அறைகள் உள்ளன. இங்கு குறைந்தபட்ச விலையாக ஒரு வாடிக்கையாளருக்கு 40 ஈரோ (இந்திய ரூபாயில் 3,500) வசூலிக்கப்படும். ‘வெள்ளி’ குழுவில் மலிவான விலையில் அறைகள் உள்ளன.  பாலியல் விடுதிக்குள் நுழைவதற்கு முன், வாடிக்கையாளர்கள் தெர்மல் டெஸ்டுக்கு உட்படுத்தப்பட்டு, அதிக வெப்பநிலை இருந்தால், அவர்கள் உள்ளே செல்ல முடியாது. வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டால் அவர்களின் நோயறிதல் தடம் அறிய வசதியாக இருக்கும். ஒவ்வொரு அறையிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் உள்ளே செல்லும்போதும், லாபியில் காத்திருக்கும்போது முகக் கவசம் அணிய வேண்டும். ‘தங்கம்’ பிரிவுக்கு வருபவர்கள் உடலுறவுக்கு முன் குளிக்க வேண்டும். அங்கு அளிக்கும் ஆடைகளைதான் அணிய வேண்டும். உடலுறவின் போது வாடிக்கையாளரோ, தொழிலாளியோ அறையில் முகக் கவசம் அணியத் தேவையில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் நேரடியாக உறவு கொள்ளக் கூடாது(?). அனைத்து பாலியல் தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட மருத்துவ பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை தெசலோனிகி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

மூலக்கதை