எங்கள் தந்தையின் உற்சாகமான முகத்தை தவற விட்டு விட்டோம்: பிரணாப் மகள் உருக்கம்

தினகரன்  தினகரன்
எங்கள் தந்தையின் உற்சாகமான முகத்தை தவற விட்டு விட்டோம்: பிரணாப் மகள் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவால் டெல்லியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதியானது. மூளையில் ரத்தக்கட்டு இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இதனால், அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை தனது வீட்டில் பிரணாப் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இம்முறை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அதை தவற விட்டுள்ளார். இது பற்றி அவருடைய மகள் ஷர்மிஸ்தா கூறுகையில், ‘‘ தனது சிறுவயது முதலே சுதந்திர தினத்தை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடும் பழக்கம் கொண்டவர் என் தந்தை. எங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவதில் அவருக்கு அத்தனை சந்தோஷம். கடந்தாண்டு கூட சிறப்பாகக் கொண்டாடினோம். இந்தாண்டு கொண்டாட்டத்தை அவர் தவற விட்டுள்ளார்.  நாங்களும் அவரது உற்சாகமான முகத்தை காண்பதை தவறி விட்டுள்ளோம்,’’ என்றார்.

மூலக்கதை