சிஎஸ்கே பயிற்சி தொடக்கம்

தினகரன்  தினகரன்
சிஎஸ்கே பயிற்சி தொடக்கம்

சென்னை: ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.டோனி,  பியுஷ் சாவ்லா, தீபக் சாகர், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள்  நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அனைவரும்  நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடவே தனியார் மருத்துவமனை மூலம் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  அணியின் பயிற்சி உதவியாளர்கள், அலுவலர்கள் என  மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் தொற்று இல்லை என முடிவு  வந்துள்ளதாக சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை வந்துள்ள சிஎஸ்கே வீரர்கள் நேற்று மாலை சேப்பாக்கம் அரங்கில் பயிற்சி மேற்கொண்டனர். வெளியாட்கள் யாரும் உள்ளே  அனுமதிக்கப்படவில்லை. பயிற்சி முகாம் ஆக.20ம் தேதி வரை நடக்கும் எனத் தெரிகிறது.  சிஎஸ்கேயில் இடம் பெற்றுள்ள சென்னை வீரர்களான  முரளி விஜய், என்.ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோரும்  அணியுடன் இணைந்துள்ளனர். பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உள்ளிட்ட  இந்திய பயிற்சியாளர்கள் மட்டுமே தற்போது பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட எஞ்சிய வீரர்கள் விரைவில் அணியுடன் இணைவார்கள். தொடர்ந்து ஆக.21ம் தேதி   சென்னையில் இருந்து  ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் செல்கின்றனர்.

மூலக்கதை