ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி

தினகரன்  தினகரன்
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி

ஜெனீவா: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ஆயுத தடையை நீட்டிக்கக் கோரிய அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி  அடைந்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் குவித்து வைத்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று பல நாடுகள்  குற்றச்சாட்டை முன் வைத்தன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ம் ஆண்டு சிவில் அணுசக்தி  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே, ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்படுவதாகவும், சில நாடுகள் ஈரானுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி  ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக 2018ம் ஆண்டு டிரம்ப் அறிவித்தார். இதன் அடுத்தகட்டமாக ஈரான் மீது காலவரையின்றி ஆயுத தடையினை நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் தீர்மானம்  நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு  நடந்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக டொமினிக் குடியரசு மட்டுமே  வாக்களித்தது. இரண்டு நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 11 நாடுகள் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளன. இதனால், அமெரிக்கா கொண்டு வந்துள்ள  தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

மூலக்கதை