கேரளாவில் 28 வரை கனமழை பெய்யாது

தினகரன்  தினகரன்
கேரளாவில் 28 வரை கனமழை பெய்யாது

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் வரும் 28ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை,’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்   உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் கடந்த சில தினங்களாக மழை  தீவிரமாக பெய்து வந்தது. ஆனால் தற்போது மழையின் தீவிரம்  சற்று  குறைந்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  நிலைக்கு வாய்ப்பு இல்லை. ஆகவே வரும் 28ம் தேதி வரை ேகரளாவில் கனமழைக்கு  வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில்  கடந்த  ஜூன் 1 முதல் இதுவரை 1,574 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட  ஒரு சதவீதம் குறைவு. ஆனால் இம்மாதம் 6 முதல் 12ம் தேதி வரை  சராசரியை விட  217 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை