'கமலா ஹாரிஸை விட எனக்கு தான் இந்தியர்கள் ஆதரவு அதிகம்': அதிபர் டிரம்ப்

தினமலர்  தினமலர்
கமலா ஹாரிஸை விட எனக்கு தான் இந்தியர்கள் ஆதரவு அதிகம்: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை விட எனக்கு தான் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஆதரவாக உள்ளனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


நியூயார்க் நகரில் உள்ள போலீஸ் நல சங்கத்தில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் விட எனக்கு தான் இந்தியர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. ஜோ பிடன் அதிபர் ஆனால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. கமால ஹாரிஸ் அவருடைய கட்சிக்கு பின்னடைவை தருவார். பிடனை விட அவர் மோசமானவர் கமலா ஹாரிஸ் போலீசாருக்கு எதிராக நடந்து கொள்வார்.

மேலும் ஜோ பிடன் அமெரிக்க காவல் துறைக்கு நெருக்கடி தரும் சட்டங்களை இயற்றுவார். மேலும் செனட்டர் எலிசெபத் வாரனை, பிடன் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்' இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

மூலக்கதை