இந்தியா எதிர்கொள்ளும் இரண்டு சவால்கள்

தினமலர்  தினமலர்
இந்தியா எதிர்கொள்ளும் இரண்டு சவால்கள்

பீஜிங்: 2020ம் ஆண்டு இந்தியாவிற்கு வழக்கமான ஆண்டு அல்ல. கொரோனா வைரஸ் மற்றும் எல்லையில் பிரச்னை ஆகிய சவால்களை எதிர்கொண்டுவருவதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.


சீன தலைநகர் பீஜிங்கில், இந்தியாவின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியேற்றி, ஜனாதிபதி ராம்நாத்தின் உரையை வாசித்த பின்னர் விக்ரம் மிஸ்ரி பேசியதாவது: ஜனாதிபதியின் உரையை கவனித்தால், சீனாவில் வசிக்கும் நமக்கு உட்பட இந்தியாவிற்கு 2020ம் ஆண்டு வழக்கமான ஆண்டு அல்ல. கொரோனா வைரஸ் மற்றும் நமது எல்லையில் அத்துமீறல் உள்ளிட்ட இரண்டு சவால்களை இந்தியர்களாகிய நாம் சந்தித்தோம். இந்தியர்கள் அனைவரும் இன்று சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும், சுதந்திர போராட்டத்தின் போது சந்தித்த பிரச்னையில் இருந்து வேறுபட்டது.


நம்முன் உள்ள சவால்களில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு, சுதந்திர போராட்டத்தின் போது செய்யப்பட்ட தியாகமும் தற்போதும் தேவை. அனைத்து தரப்பினரும் இதற்காக ஒன்று சேர வேண்டும். இந்த சவாலை சந்திக்க நாடு தயாராகிவிட்டது. கடந்த 7 மாதங்களில், கல்வி, வரி, தொழிலாளர், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், தற்போதுள்ள சவாலில் இருந்து மீட்டு கொண்டு வருவதற்கு உதவும். இவ்வாறு அவர் பேசினார்.


மூலக்கதை