2022-ம் ஆண்டின் இறுதிக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,50,000 ஆரோக்கிய மையங்கள் அமைக்கபடும்; மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

தினகரன்  தினகரன்
2022ம் ஆண்டின் இறுதிக்குள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,50,000 ஆரோக்கிய மையங்கள் அமைக்கபடும்; மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனை எண்ணிக்கையையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாவது;  130 கோடி மக்கள்தொகையுடன் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடாகவும் உள்ளது. ஜனவரி மாதம், கொரோனா வைரஸின் முதல் பாதிப்பை பதிவு செய்தபோது நாட்டில் கொரோனாவுக்கான பரிசோதனை மையம் ஒன்று மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, ​​ஆறு மாதங்களுக்குள் பின் இந்தியாவில் 1,400 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்கள் விகிதம் அதிகமாக உள்ளது. அதேசமயம் கொரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவு உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த உலகளாவிய இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை அகற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆயுஷ்மான் பாரத்-பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ் 1,50,000 ஆரோக்கிய மையங்களை அமைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை