நாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.!!!!

தினகரன்  தினகரன்
நாட்டின் 74வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் 7வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.!!!!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என மிக பிரமாண்டமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சமூக இடைவெளி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை என, மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லி செங்கோட்டையில் நடக்கும் 74-வது சுதந்திர தின விழாவில் 7-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தெரிகிறது. முன்னதாக, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி செங்கோட்டையில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு, முக்கிய விஐபிக்கள் உட்பட 4,000 பேபருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், டெல்லி முழுவதும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர். 300 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை