தனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை

தினமலர்  தினமலர்
தனி கொடி,அரசியலமைப்பு வேண்டுமாம்: நாகா பிரிவினைவாத தலைவர் சர்ச்சை

கொஹிமா: நாகா இனமக்கள், ஒரு போதும் இந்தியர்களுடன் இணையமாட்டார்கள் என நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் தலைவர் ஐசக் மூய்வா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசம், மியான்மரின் ஒரு சில பகுதிகளில் வசித்து வரும் நாகா இனத்தைச் சேர்ந்த நாகாலாந்து தேசிய சோஷியலிஸ் கவுன்சில்(என்.எஸ்.சி.என்) என்ற அமைப்பு தனி நாடு கோரி இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாகாலிம் எனப்படும் நாடு உருவாக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை. இந்த அமைப்பின் தலைவர் மூய்வா தனிநாடு போராட்டத்தை ஆதரித்து வருகிறார்.


நேற்று மூய்வா கூறியது, எங்கள் இன மக்களுக்கென சொந்த கொடியும், அரசியலமைப்பும் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையின் கூறுகள். நாகா தேசத்தின் அடையாளங்கள் நாங்கள். நாகர்கள் ஒரு போதும் இந்தியர்களுடன் இணையமாட்டார்கள் “நாங்கள் நாகா தேசியக் கொடியையும் அரசியலமைப்பையும் இந்திய அரசிடம் கேட்கவில்லை. அவற்றிற்கு அங்கீகாரம் கொடுங்கள் என கேட்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை