பாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
பாக்., அணி திணறல் | ஆகஸ்ட் 13, 2020

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 126/5 ரன் எடுத்திருந்தது. பாபர் ஆசம் (25), ரிஜ்வான் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் துவங்கியது. சற்று தாக்குப்பிடித்த பாபர் (47), பிராட் வேகத்தில் வீழ்ந்தார். யாசிர் ஷா 5 ரன் எடுத்தார். ஷகீன் அப்ரிதி (0) ரன் அவுட்டானார். 

மறுபக்கம் ரிஸ்வான், அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளைக்கு முன், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. ரிஜ்வான் (60),  நசீம் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை