மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020

தினமலர்  தினமலர்
மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு | ஆகஸ்ட் 14, 2020

மெல்போர்ன்: இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இடம் பிடித்துள்ளனர். இத்தொடர் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர் உள்ளிட்டோர் ஐ.பி.எல்., தொடரில் துவக்க போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து செல்ல உள்ள ஆஸ்திரேலிய அணி (செப். 4–16), 3 ‘டுவென்டி–20’ (செப். 4, 6, 8, இடம்: சவுத்தாம்ப்டன்), 3 ஒருநாள் (செப். 11, 13, 16, மான்செஸ்டர்)போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதற்கான 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. முழங்கை காயத்தில் இருந்து மீண்ட ‘ஆல்–ரவுண்டர்’ மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் வாய்ப்பு பெற்றனர். ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித் என, மூன்று புது முக வீரர்கள் தேர்வாகினர்.

இதன் பின் யு.ஏ.ஐ., வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனையில் மீண்ட பிறகு தான் அணியுடன் இணைய முடியும். இதனால் இவர் துவக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை