கர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 6,940 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,182 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 60.66 சதவீதமாக உள்ளது.


இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,108 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 104 பேர் பலியானதால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,717 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 2,452 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நகரில் இதுவரை மொத்தம் 84,185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக பெல்லாரி மாவட்டத்தில் 608 பேருக்கும், சிவமோகா மாவட்டத்தில் 413 பேருக்கும், தேவன்கெரே மாவட்டத்தில் 351 பேருக்கும், பெலகெவி மாவட்டத்தில் 334 பேருக்கும், உடுப்பி மாவட்டத்தில் 322 பேருக்கும், தக்ஷிண கன்னடாவில் 307 பேருக்கும், மைசூரு மாவட்டத்தில் 291 பேருக்கும், களபுராகி மாவட்டத்தில் 229 பேருக்கும், ரைசூர் மாவட்டத்தில் 220 பேருக்கும், தர்வாத் மாவட்டத்தில் 219 பேருக்கும் நேற்று புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை மொத்தம் 19 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,638 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் 79,201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை