கொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா!

தினமலர்  தினமலர்
கொரோனா பரவல் சூழலில் ஊரடங்கை நீக்கியுள்ளது வடகொரியா!

பியோங்யாங்: கொரோனா பரவல் காரணமாக கேசாங்கில் நகரில் வடகொரியா ஊரடங்கு விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.



வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில், கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்டார். அதனால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் 'சீல்' வைத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.


'கொரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும். பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை' என, வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


'உலகம் முழுவதும் கொரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது, வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வடகொரியாவில் கொரோனா தீவிரம் காட்ட துவங்கியுள்ளது' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை