பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரேசிலில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று 1,262 பேர் உயிரிழக்க பிரேசிலில் கொரோனாவுக்கு இதுவரை 1,05,463 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கை 60,000-ஐ கடந்துள்ளது.\r தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கொரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.\r கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்னர் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்புமருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மூலக்கதை