காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்

தினமலர்  தினமலர்
காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கால் விற்பனையாகாமல் தேக்கமடைந்த காலாவதியான பீரை பயன்படுத்தி, சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மின்சாரம் தயாரித்துள்ளது.



ஆஸ்திரேலியாவில் உள்ள 'தி கிளெனெல்க்' என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உணவகங்கள், மதுபான விடுதி மற்றும் பார்களில் விற்பனையாகமல் கெட்டு போன பீர்களை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றியுள்ளது.


'தி கிளெனெல்க்' என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினர் தெரிவித்துள்ளதாவது:

குறைந்தபட்சம் 1 லி., பீர் தயாரிக்க, 4 லி., தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் இதை வீணாவதைத் தவிர்க்க மாற்று வழிகள் குறித்து சிந்தித்தோம்.
அதிக வெப்பநிலையில், பீரை கழிவுநீர் கசடுடன் கலந்தோம். இது உயிர்வாயுவை வெளியிடுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உருவானது.


எங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வாரத்திற்கு 1.5 லட்சம் லி., காலாவதி பீரை மறுசுழற்சி செய்ய முடிகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 1,200 வீடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. பீரை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் சுய சார்பு நிலையை அடைய முடியும். கொரோனா தொற்று சூழல் முடிந்தாலும், இந்த செயல்முறை நிலைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கெட்டுப் போன பீரில் மின்சாரம் தயாரித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிய சாதனை படைத்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை