கமலா ஹாரிசுக்கு மிச்சேல் ஒபாமா வாழ்த்து: லைக்குகளை குவித்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

தினமலர்  தினமலர்
கமலா ஹாரிசுக்கு மிச்சேல் ஒபாமா வாழ்த்து: லைக்குகளை குவித்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. ஜனநாயகக் கட்சி தனது துணை அதிபர் வேட்பாளராக, தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசை அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



இந்நிலையில், முன்னாள் அமெரிக்க முதல் குடிமகள் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, கமலா ஹாரிசுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


மிச்செல் ஒபாமா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
கருப்பினத்தில் பிறந்து சிறுவயது முதலே தனது இனத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருத்தியலை பின்பற்றி வாழ்ந்தவள் நீ.
மாற்றம் கட்டாயமாக நடக்கும். ஆனால் அதற்கு சற்று நேரமாகும். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிரிக்கா மற்றும் தென்னிந்திய பூர்வீகம் கொண்ட ஒருவர் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.


நம்மைப்போன்ற கருப்பினப் பெண்மணி யாராவது முக்கிய பதவியில் அமர மாட்டார்களா என்ற பல கருப்பின பெண்களது கனவை கமலா நிறைவேற்றியுள்ளார். துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வாகியுள்ள முதல் பெண்மணி கமலா. ஆனால் அவர் கடைசி பெண்மணியாக இருக்கமாட்டார். மென்மேலும் பல கருப்பின பெண்மணிகள் முக்கிய பதவிக்கு வருவார்.

இவ்வாறு மிச்செல் ஒபாமா, கமலா ஹாரிசுக்கு தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை