கேரளாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் தினந்தோறும் 20,000 கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு...: மாநில சுகாதாரத்துறை தகவல்...!!

தினகரன்  தினகரன்
கேரளாவில் வரும் செப்டம்பர் மாதத்தில் தினந்தோறும் 20,000 கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு...: மாநில சுகாதாரத்துறை தகவல்...!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் முன்பு அதிகளவில் கட்டுபடுத்தி வந்த நிலையில் தற்போது சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 1,564 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1,404 பேர் பிறரிடம் இருந்து தொற்றால் பாதிப்படைந்தவர்கள்.  15 பேர் சுகாதார பணியாளர்கள்.  5 பேர் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் 4 பேர் கடலோர காவல் படையினர் என உள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த பாதிப்பு 39,708 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அதிக அளவாக ஒரு நாளில் 434 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  3 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்தது. இதை தொடர்ந்து கேரளாவில் அதிகரித்து வரும் பாதிப்புகள் பற்றி கேரள சுகாதார மந்திரி சைலஜா வீடியோ ஒன்றின் வழியே கூறும்பொழுது, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.  மேலும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிப்பு உறுதி செய்யப்பட கூடும் என அவர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.  கேரளாவில் கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் பணியில் சேரும்படி இளைஞர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.

மூலக்கதை