'பொய்கள் கூறியதற்காக வருந்தியதுண்டா?': பத்திரிக்கையாளர் கேள்வியால் டிரம்ப் தர்மசங்கடம்

தினமலர்  தினமலர்
பொய்கள் கூறியதற்காக வருந்தியதுண்டா?: பத்திரிக்கையாளர் கேள்வியால் டிரம்ப் தர்மசங்கடம்

வாஷிங்டன்: 'மக்களிடம் கூறிய பொய்களுக்காக தாங்கள் என்றாவது வருந்தியது உண்டா' ? என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போதும் பொதுமக்கள் உரையின் போதும் அவர் ஏராளமான பொய் செய்திகளையும் தவறான தகவல்களையும் அளிப்பதாக அவர் மீது ஏற்கனவே விமர்சனம் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிபர் டிரம்ப் 20,000க்கும் அதிகமான பொய்களை கூறியிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 12 பொய்களை கூறி விடுகிறார். கொரோனா தீவிரமாக பரவிய தொடங்கிய சில மாதங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் சுட்டிகாட்டியுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஷிரிஷ் டேம் டிரம்பை நோக்கி, அமெரிக்க மக்களிடம் தாங்கள் கூறிய பொய்களுக்காக வருந்தியது உண்டா? என்று கேள்வி எழுப்பினார். திடீரென்று கேட்கப்பட்ட இக்கேள்வியால் டிரம்ப் தர்மசங்கடத்திற்கு ஆளானார். சிறிது நேரம் அமைதியானார். பத்திரிக்கையாளரின் இக்கேள்வியை அவர் புறக்கணித்தார். மீண்டும் அதே கேள்வியை டேட் கேட்க, டிரம்ப் அடுத்த கேள்விக்கு தாவிவிட்டார்.


பத்திரிக்கையாளர் ஷிரிஷ் டேட் தன் பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் டிர்மப் பொய்களை பற்றி பல முறை இ-மெயில் அனுப்பியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபரின் பொய் குறித்து தனது பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருந்தார். இந்த கேள்வி குறித்து ஷிரிஷ் டேட், ' டிரம்பிடம் இந்த கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தேன் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை