முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..!!

தினகரன்  தினகரன்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!: டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..!!

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறிய அளவில் மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று திடீரென்று பிரணாப் முகர்ஜி காலமாகி விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆதலால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடரந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார் என்று மருத்துவமனை மீண்டும் தெரிவித்தது. இதை தொடர்ந்து, இன்று காலையில் டெல்லி ராணுவ மருத்துவம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை