தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினமலர்  தினமலர்
தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை குறைந்தளவு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 3 மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, மத்திய , மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் செயல்பட துவங்கின. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து தொழிற்சாலைகளுக்கு அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 90 சதவீத மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை குறைந்தளவு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை