தமிழகத்தில் உள்ள 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் உள்ள 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 3 அரசு உட்பட 41 பி.எட் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதி குறைபாடு, ஆசிரியர் தட்டுப்பாடு, உட்பட பல புகார்கள் எழுந்துகொண்டே வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த கூட்டதின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பி.எட் கல்லூரிகளில் உள்ள வசதிகள், உள்கட்டடைப்பு வசதிகளில் குறைபாடு உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சைதாப்பேட்டை, வேலூர் மற்றும் கோவையில் உள்ள 3 அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்பட தமிழகத்தில் உள்ள 41 பி.எட் கல்லூரிகளுக்கு இந்த நோட்டீசானது அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், குறிப்பிட்ட கல்லூரியில் உள்ள என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பதும், அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்கள்  எவையெல்லாம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையெல்லாம் குறிப்பிட்டு, இவ்வளவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை நாங்கள் ஏன் ரத்து செய்யக்கூடாது?  என கேள்வியெழுப்ப பட்டுள்ளது. இதற்கான  விளக்கத்தை, அந்தந்த கல்லூரிகள் சமர்ப்பிக்க தவறிய ஆவணங்களுடன் 21 நாட்களில் சமர்ப்பித்து விளக்கமளிக்க வேண்டும், என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை