திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்

புதுடெல்லி'; திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர்  தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் அடுத்தமாதம் நடத்த இருந்த நிலையில், மழை, கொரோனா பாதிப்பால் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்று 4 மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் கமிஷனுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிப்பு அதிகரித்து வருகின்றன.

சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. டெல்லி, அசாம், பீகார், கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.   இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா மற்றும் மழை, வெள்ளம் ஆகிய பாதிப்பை முன்னிட்டு 6 மாதங்களுக்கு மேல் காலியாகவுள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை வருகிற செப்.

7ம் தேதி வரை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது.

தொடர்ந்து நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதி, ஒரு  நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் தமிழ்நாடு (திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர்  சட்டமன்ற தொகுதிகள்), அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா,  குஜராத், அரியானா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட  வேண்டியுள்ளது.

ஆனால், அவையும் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய மாவட்ட நிர்வாகம் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இடைத்தேர்தலை இப்போதைக்கு நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கொரோனா பரவல், மழை வெள்ள பாதிப்பால், இடைத்தேர்தல்களை ஒத்திவைக்கக் கோரி கேரளா, மத்திய பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

கொரோனா மற்றும் மழை காரணங்களை காட்டி பீகார் பேரவை தேர்தலை நடத்தவில்லை என்றால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் விக்ரம் சம்பத் கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் தற்ேபாதைய நிலைமையை மதிப்பீடு செய்து அறிவிப்பை வெளியிடும்.

ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி அவற்றை ஒத்திவைக்கலாம்.

தேர்தலை எவ்வளவு காலம் ஒத்திவைக்க முடியும் என்பதில் எந்த விதியும் இல்லை. தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை மட்டுமே குறிப்பிட முடியும்’ என்றார்..

மூலக்கதை