முத்தான முதல் சதம்: பாண்ட்யாவுக்கு பாராட்டு | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
முத்தான முதல் சதம்: பாண்ட்யாவுக்கு பாராட்டு | ஆகஸ்ட் 13, 2020

மும்பை: இந்திய வேகப்பந்துவீச்சு ‛ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 26. இதுவரை 11 டெஸ்ட் (532 ரன், 17 விக்கெட்), 54 ஒருநாள் (957 ரன், 54 விக்கெட்), 40 சர்வதேச ‛டுவென்டி-20’ (310 ரன், 38 விக்கெட்) போட்டிகளில்  பங்கேற்றுள்ள இவர், ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக (66 போட்டி, 1068 ரன், 42 விக்கெட்) விளையாடி வருகிறார்.

கடந்த 2017ல் (ஆக. 12) பல்லேகெலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் 96 பந்தில் 108 ரன்கள் (7 சிக்சர், 8 பவுண்டரி) விளாசினார். டெஸ்ட் அரங்கில் இவர் அடித்த முதல் சதமாக இது அமைந்தது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை 3-–0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. இவர், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஹர்திக் பாண்ட்யாவின் முத்தான முதல் சதத்தை கவுரவிக்கும் விதமாக ஐ.பி.எல்., மும்பை இந்தியன்ஸ் அணி, தனது ‛இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் கோப்பை மற்றும் ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யாவின் போட்டோவை பதிவிட்டுள்ளது. இதில் ‛எப்போதும் சிறப்பு’ என, தெரிவித்திருந்தது. இப்புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மூலக்கதை