வார்னிடம் பேசவே இல்லை * என்ன சொல்கிறார் குல்தீப் யாதவ் | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
வார்னிடம் பேசவே இல்லை * என்ன சொல்கிறார் குல்தீப் யாதவ் | ஆகஸ்ட் 13, 2020

 புதுடில்லி: ‘‘முதன் முதலில் வார்னை சந்தித்த போது, பத்து நிமிடம் பேசவே இல்லை,’’ என குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25. கடந்த 2017 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், நான்காவது போட்டியில் (தர்மசாலா) அறிமுகம் ஆனார். இதுகுறித்து அவர் கூறியது:

ஆஸ்திரேலிய சுழல் ‘ஜாம்பவான்’ ஷேன் வார்னை, முதன் முறையாக புனேயில் சந்தித்தேன். அப்போதைய பயிற்சியாளர் கும்ளே என்னை அறிமுகம் செய்தார். முதல் பத்து நிமிடம் எதுவும் பேசவே இல்லை. 

கும்ளேயிடம் தான் பேசினார். பின் இருவரும் நிறைய பேசினோம். எனது திட்டங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்,‘ நான் நிறைய யோசிப்பதாக’ கூறினார். அடுத்து அவரை பல முறை சந்தித்தேன். பயிற்சியாளர் போல எப்போதும் எனக்கு உதவியாக இருந்தார். 

இதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நண்பராகி விட்டார். 

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

மூலக்கதை