பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் விளையாட்டு குறித்து எதுவுமே தெரியாதவர்கள் நியமனம் : பிரதமர் இம்ரான் கான் மீது மியான்தத் குற்றச்சாட்டு!!

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் விளையாட்டு குறித்து எதுவுமே தெரியாதவர்கள் நியமனம் : பிரதமர் இம்ரான் கான் மீது மியான்தத் குற்றச்சாட்டு!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் இடையே மோதல் வெடித்துள்ளது. இது குறித்து யூடியூபில் ஜாவித் மியான்தத் வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் இந்த விளையாட்டை பற்றிய எந்த அடிப்படை விஷயங்களும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் பிரதமர் இம்ரான் கான் தான் என்றும் கடவுள் போல் அதில் செயல்படுவதாகவும் ஜாவித் மியான்தத் கொதித்தெழுந்துள்ளார். மேலும் இது தொடர்பாக இம்ரான் கானுடன் பேச உள்ளதாகவும் அப்போது பாகிஸ்தானுக்கு ஒத்துழைக்காத ஒருவரையும் கிரிக்கெட் வாரியத்தில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப் போவதாகவும் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ள வாசிம் கானை மறைமுகமாக ஜாவித் மியான்தத் சாடியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மட்டுமல்லாது அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

மூலக்கதை