கமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்

தினமலர்  தினமலர்
கமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்

வாஷிங்டன்: துணை அதிபர் வேட்பாளராக கமலாஹாரீஷை அறிவித்தது சரியானே தேர்வு தான் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, போட்டியிட உள்ளார்.


நேற்று ஜோபிடன் தன் துணை அதிபர் வேட்பாளராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும் கலிபோர்னியா மாகாண செனட்டருமான கமலா தேவி ஹாரிஸ்(55) பெயரை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஜோபிடன் வெல்மிங்டனில் தனது முதல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியது, துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீசை அறிவித்தது சரியான தேர்வு தான். ஹாரீஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். கொடுத்த பணியை எதிர்பார்ப்புக்கு மேல் பூர்த்தி செய்யக் கூடியவர். அனுபவமும் திறமையும் கொண்டபுத்திசாலி பெண். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை