'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்

தினமலர்  தினமலர்
பெண் பராக் ஒபாமா என புகழப்படும் கமலாவின் முதல் சாதனைகள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ்(55) பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'முதல்' சாதனைகள்


* துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள, ஜனநாயக கட்சியின் முதல் கறுப்பினப் பெண்

* தேர்தலில் வென்றால், அமெரிக்க துணை அதிபராகும் முதல் பெண். முதல் ஆப்ரிக்க அமெரிக்கர், முதல் இந்திய அமெரிக்கர்

* இதற்கு முன், இரண்டு பெண்கள் மட்டுமே, துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த, 2008ல் குடியரசு கட்சி சார்பில், சாரா பாலின்; 1984ல் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜெரால்டின் பெராரோ போட்டியிட்டனர். ஆனால், வெற்றி பெறவில்லை

* முதல் கவுன்டி அட்டர்னி எனப்படும் அரசு வழக்கறிஞர்; சான்பிராஸ்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்; அந்த மாவட்ட அட்டர்னியாக நியமிக்கப்பட்ட, முதல் ஆப்ரிக்க அமெரிக்கர், முதல் இந்திய அமெரிக்கர்

* கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண், முதல் இந்திய அமெரிக்கர்

* செனட் சபை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர், இரண்டாவது ஆப்ரிக்க அமெரிக்கர்.

மூலக்கதை