அறிவுறுத்தல்! சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு

தினமலர்  தினமலர்
அறிவுறுத்தல்! சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு

கடலுார் : கொரோனா பரவலையொட்டி வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை எளிமையாக கொடியேற்றி கொண்டாட கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கும் விழாவை உள்ளூர் தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுதந்திர தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறைகளுக்கு பரிசு வழங்குவது, மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சிகள் என அமர்க்களமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டியுள்ளது.

bஎனவே சுதந்திர தினத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக இடைவெளியை கடைபிடித்து தேசிய கொடியேற்றி கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வித் துறை சுற்றறிக்கை அதேப்போல பள்ளிகளில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட பள்ளி கல்வித் துறை சார்பில், அனைத்து சி.இ.ஓ., அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்கள், அனைத்து வகை பள்ளிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் களப் பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்ட, அவர்களை சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் ஆலோசனைகடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் மற்றும் வி.ஐ.பி., க்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறே பார்க்கும் வகையில் உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. விழாவில் பொதுமக்கள் கூட்டத்தை குறைப்பது, கொரோனா பணிக்காலத்தில் சிறப்பாக பணி புரிந்தவர்களை கவுரவிப்பது குறித்தும், மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, எஸ்பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர்.

மூலக்கதை