வேண்டாம் 'இ- பாஸ்' முதல்வருக்கு முருகன் கடிதம்

தினமலர்  தினமலர்
வேண்டாம் இ பாஸ் முதல்வருக்கு முருகன் கடிதம்

சென்னை: 'இ -- பாஸ்' நடைமுறையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ. தலைவர் முருகன் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. வேலை மற்றும் தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்கு உள்ளேயோ வெளியிலோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவசியமான தேவைகளுக்கு கூட 'இ- - பாஸ்' கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.

கணவன் - மனைவி சந்திக்க முடியாத நிலைமை பெற்றோர் -- பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என 'இ- - பாஸ்' முறையால் அவதிக்குள்ளாகும் குமுறல்கள் செய்தியாக வந்து சேர்கின்றன.இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ -- பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே மக்கள் சிரமத்தை கருத்தில் வைத்து தமிழகத்தில் இ -- பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.

மூலக்கதை