அவதி! குப்பை குவியல்கள் எரிப்பு ... சுகாதார சீர்கேட்டால் மக்களுக்கு சிரமம்

தினமலர்  தினமலர்
அவதி! குப்பை குவியல்கள் எரிப்பு ... சுகாதார சீர்கேட்டால் மக்களுக்கு சிரமம்

புதுச்சேரி, : திருக்கனுார் - கூனிச்சம்பட்டு சாலையில் குப்பைகள் கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

திருக்கனுாரில் இருந்து கூனிச்சம்பட்டு வழியாக மணலிப்பட்டு, தமிழகப் பகுதியான கோரைக்கேணி, ஐவேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையோரத்தில், கூனிச்சம்பட்டு காலனி பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகளை சாலை யோரத்தில் குவித்து வைப்பதோடு, அவ்வப்போது தீ வைத்து எரித்து வருகின்றனர்.இதனால், திருக்கனுார் - கூனிச்சம்பட்டு சாலையில், கடும் புகை சூழ்ந்துவிடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, கூனிச்சம்பட்டு சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை